Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆத்துார் வங்கியில் போலி நகை மூலம் கடன் மதிப்பீட்டாளர், நாடகமாடிய பெண் கைது

ஆத்துார் வங்கியில் போலி நகை மூலம் கடன் மதிப்பீட்டாளர், நாடகமாடிய பெண் கைது

ஆத்துார் வங்கியில் போலி நகை மூலம் கடன் மதிப்பீட்டாளர், நாடகமாடிய பெண் கைது

ஆத்துார் வங்கியில் போலி நகை மூலம் கடன் மதிப்பீட்டாளர், நாடகமாடிய பெண் கைது

ADDED : ஜூன் 28, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
ஆத்துார்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் கனரா வங்கியில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

ஊழியர்கள் விசாரணை துவக்கிய சூழலில் அழகர்நாயக்கன்பட்டி டிரைவர் சவுந்தரபாண்டியன் மனைவி சோனாஸ்ரீ 26, ஜன. 13ல் அடகு வைத்த 76 கிராம் தங்க நகையை கவரிங் என வங்கி தரப்பில் தகவல் தெரிவித்ததாக கூறி, நகை வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி நடந்ததாக திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் வங்கியின் மண்டல உதவி மேலாளர் வின்ஜமுரி புகார் செய்தார்.

விசாரணையில் நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் 36, உதவியுடன் சோனாஸ்ரீ, உறவினர்கள் சிலர் பெயரில் 130 பவுன் கவரிங் நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் சோனாஸ்ரீயின் உறவினர்கள் சிலரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us