/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மலைகளில் நீர் தட்டுப்பாட்டால் தரையிறங்கும் காட்டு மாடுகள் மலைகளில் நீர் தட்டுப்பாட்டால் தரையிறங்கும் காட்டு மாடுகள்
மலைகளில் நீர் தட்டுப்பாட்டால் தரையிறங்கும் காட்டு மாடுகள்
மலைகளில் நீர் தட்டுப்பாட்டால் தரையிறங்கும் காட்டு மாடுகள்
மலைகளில் நீர் தட்டுப்பாட்டால் தரையிறங்கும் காட்டு மாடுகள்
ADDED : செப் 09, 2025 04:29 AM
வடமதுரை: அய்யலுார் பகுதி மலைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகும் காட்டு மாடுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அய்யலுார் பகுதியி இருக்கும் மலைத்தொடர்களில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீர் ஆதாரங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் காட்டுமாடுகள் நீர், உணவு தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், வீடுகளை தேடி இறங்கி வருகின்றன.
வயலில் கிடைக்கும் பயிர்களை தின்பதால் விவசாயிகளும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சிலநேரங்களில் காட்டுமாடுகளை விரட்ட முயலும் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மலை அடிவாரங்களில் நீர் தொட்டிகள் அமைத்து வன விலங்குகளின் நீர் தேவைக்கு உதவிட வனத்துறையினர் தகுந்த திட்டப்பணிகள் செய்ய வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.