ADDED : மே 31, 2025 12:54 AM
வேடசந்துார்:திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலை மாவட்ட எல்லையான ரங்கமலை பகுதியில், குரங்குகள், காட்டு பூனைகள் , புழுகு பூனைகள், தேவாங்குகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.
இரவு நேரங்களில் உணவு குடிநீர் தேடலின் போது நெடுஞ் சாலை குறுக்காக கடக்கும் நிலையில் அவ்வப்போது வாகனங்கள் மோதி அடிபட்டு இறக்கின்றன.
நேற்று ரங்கமலை தனியார் நூற்பாலை அருகே காட்டு பூனை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.