/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஏன் இந்த அலட்சியம் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளுடன் பிளக்ஸ் பேனர் விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்,அப்பாவி மக்கள்ஏன் இந்த அலட்சியம் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளுடன் பிளக்ஸ் பேனர் விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்,அப்பாவி மக்கள்
ஏன் இந்த அலட்சியம் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளுடன் பிளக்ஸ் பேனர் விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்,அப்பாவி மக்கள்
ஏன் இந்த அலட்சியம் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளுடன் பிளக்ஸ் பேனர் விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்,அப்பாவி மக்கள்
ஏன் இந்த அலட்சியம் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளுடன் பிளக்ஸ் பேனர் விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்,அப்பாவி மக்கள்
ADDED : ஜன 05, 2024 04:24 AM

நத்தம் : -திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகளுடன் வாகனங்களை நிறுத்தியும், பிளக்ஸ் பேனர்களை அமைத்தும் உள்ளதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது .இதனால் வாகன ஓட்டிகள் ,அப்பாவி மக்கள் பாதிக்கின்றனர்.
மாவட்டத்தில் கிராம ரோடுகள் , மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை யோர ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. முக்கிய நகர, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சிறுகடைகள், தள்ளுவண்டிகளை நிறுத்துவது, மரங்களை போட்டு ஆக்கிரமிப்பு, சாலையை மறித்து வாகனங்களை நிறுத்துவது போன்ற தற்காலிக ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளின் பிளக்ஸ் போர்டுகள், கட்டடங்களின் முகப்பு பகுதிகள் போன்றவை சாலைகளில் செல்வோர், வாகன ஒட்டுநர்களின் கவனத்தை சிதறடிப்பதுடன், இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சாலை ஓரங்களில் உள்ள சில உணவகங்கள் வாகனங்களை இடைமறித்து அழைக்க தனிநபரையும் நிறுத்தி உள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. திருவிழா, காலங்களில் அனுமதி இன்றி பிளக்ஸ் வைப்பதும் அதிகரித்துள்ளது. விழா முடிந்தும் அப்புறப்படுத்தாமல் பல மாதங்கள் அப்படியே உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் ,நெடுஞ்சாலை துறையினர் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
...............
நடவடிக்கை எடுக்கலாமே
நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையோர கடைகள்,விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைப்பதும் ,திருவிழா காலங்களில் நெடுஞ்சாலைகள் முழுவதும் அனுமதி இன்றி பிளக்ஸ் வைப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.சாலையோர ஆக்கிரமிப்புகளால் எதிரே வரும் வாகனங்களை காணமுடியாமல் வாகன ஓட்டிகளும் திணறுவதோடு விபத்திலும் சிக்குகின்றனர்.இதை கருத்தில் கொண்டு தற்காலிக,நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அனுமதியின்றி பிளக்ஸ் வைக்கும் நபர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர், நத்தம்.
............