/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏன் இந்த தாமதம்: கால்நடைகள் இறந்தால் ரூ.40 ஆயிரம் அறிவிப்பு: செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் குமுறல் ஏன் இந்த தாமதம்: கால்நடைகள் இறந்தால் ரூ.40 ஆயிரம் அறிவிப்பு: செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் குமுறல்
ஏன் இந்த தாமதம்: கால்நடைகள் இறந்தால் ரூ.40 ஆயிரம் அறிவிப்பு: செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் குமுறல்
ஏன் இந்த தாமதம்: கால்நடைகள் இறந்தால் ரூ.40 ஆயிரம் அறிவிப்பு: செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் குமுறல்
ஏன் இந்த தாமதம்: கால்நடைகள் இறந்தால் ரூ.40 ஆயிரம் அறிவிப்பு: செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் குமுறல்
ADDED : மே 23, 2025 04:29 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மாவட்டத்தில் 185 ஆவின் கூட்டுறவு பால் சொசைட்டிகள் உள்ளன. இந்த சொசைட்டிகளில் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால் போதிய பயன் பெற்று வருகின்றனர்.
கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளின் நலன் கருதி கறவை மாடுகள் தவறி கிணற்றில் விழுந்து இறந்தாலோ, விஷ ஜந்துக்கள்,நாய் கடியால் இறந்தாலோ விவசாயிகள் பாதிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஓர் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். ரூ. 75 செலுத்தி இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சேர்ந்தால் கால்நடைகள் மின்னல், மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட பாதிப்புகளால் இறக்கும் பட்சத்தில் ரூ.40 ஆயிரம் இன்சூரன்ஸ் தொகை பெறலாம் என அறிவித்தார் கலெக்டரின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் நேற்று வரை கூட்டுறவு பால் சொசைட்டிகளில் கலெக்டரின் உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை. இது குறித்து கேட்டாலும் முறையான தகவல் இல்லை என பால் உற்பத்தியாளர்கள் குமுறுகின்றனர்.