Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஏன் இந்த சுணக்கம்: சேதமான ரோடுகளால் தொடரும் விபத்துகள்

ஏன் இந்த சுணக்கம்: சேதமான ரோடுகளால் தொடரும் விபத்துகள்

ஏன் இந்த சுணக்கம்: சேதமான ரோடுகளால் தொடரும் விபத்துகள்

ஏன் இந்த சுணக்கம்: சேதமான ரோடுகளால் தொடரும் விபத்துகள்

ADDED : மார் 25, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நத்தம்: -திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளில் சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலைகளின் ஆபத்தான பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை தொடர்கிறது. இதன்மீது துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரோடுகளில் ஆபத்தான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடு சேதம் அடைந்துள்ளது.மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் இது போன்று ரோடுகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் உள்ளனர்.கிராம ரோடுகள் முதல் நகர், மலை பகுதி, நெடுஞ்சாலை ரோடுகள் என அனைத்து வகையான ரோடுகளிலும் இதுபோன்ற பள்ளங்கள் உள்ளன. பெரும்பாலான பாலங்கள், மேம்பாலங்களில் ஆபத்தான பள்ளங்களும், மழைநீர் வெளியேறுவதற்காக வைக்கப்பட்டுள்ள துவாரங்களில் குழந்தைகள் விழும் அளவிற்கு பெரிய அளவில் பள்ளம் உள்ளது.இது ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும்அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மழையின் போது இது போன்ற பள்ளங்களில் -டூவீலர் முதல் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்களில் சிக்குவதும், சிறுகாயங்கள் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரோடுகளில் உள்ள ஆபத்தான பள்ளங்கள் தெரியாததால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் செல்வதாலும், தரமற்ற ரோடு பணிகளால் ரோடுகளில் தண்ணீர் தேங்குவதாலும் ரோடுகள் சேதமாகிறது. இதை கருதி மாவட்டம் முழுவதும் உள்ள சேதமடைந்த ரோடுகளை கண்டறிந்து சீரமைப்பது அவசியமாகிறது.

............

நடவடிக்கை எடுங்க

செடிப்பட்டி, பாப்பம்பட்டி, மொட்டைகவுண்டன்பட்டி, புன்னப்பட்டி, தவசிமடை, கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ரோடுகளில் ஆபத்தான பள்ளங்கள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள ரோடு சேதங்களால் விபத்துகள் அதிகரிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆபத்தான பள்ளங்களில் சிக்க உயிரிழப்புகள் வரை ஏற்படுகிறது.

மழைநீர் அரிப்பு, ரோட்டில் தண்ணீர் தேங்குவது, தரமற்ற முறையில் ரோடு அமைப்பது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான ரோடுகளில் திடீர் பள்ளங்கள் உருவாகி இது போன்று விபத்துக்கள் ஏற்படுகிறது.துறை சார்ந்த அதிகாரிகள் ரோடு சேதங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோ.ஆனந்தகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர், பா.ஜ., தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு, வேம்பார்பட்டி- ,நத்தம்.

..........





      Our Apps Available On




      Dinamalar

      Follow us