/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கவனக்குறைவால் ஏற்படும் மின் விபத்து; உயிரிழப்பு தடுக்க தேவை விழிப்புணர்வு கவனக்குறைவால் ஏற்படும் மின் விபத்து; உயிரிழப்பு தடுக்க தேவை விழிப்புணர்வு
கவனக்குறைவால் ஏற்படும் மின் விபத்து; உயிரிழப்பு தடுக்க தேவை விழிப்புணர்வு
கவனக்குறைவால் ஏற்படும் மின் விபத்து; உயிரிழப்பு தடுக்க தேவை விழிப்புணர்வு
கவனக்குறைவால் ஏற்படும் மின் விபத்து; உயிரிழப்பு தடுக்க தேவை விழிப்புணர்வு
ADDED : மே 21, 2025 05:20 AM

கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே மின் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருந்தாலும் மின் விபத்து உயிரிழப்புகள் தொடரும் நிலையே உள்ளது.
மழைகாலம் மட்டுமின்றி, வீடுகள், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதது போன்ற பல்வேறு காரணங்களாலும் மின் கசிவு, அதன் மூலம் தீ விபத்து, உயிரிழப்பு, படுகாயம், பொருட்சேதம் என இடர்கள் நேர்கின்றன.
ஐதராபாத் சார்மினார் பகுதியில் மின் கசிவு காரணமாக 8 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
கரூர் மகாதானபுரம் அருகே டவர் வேலியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பெங்களூருவில் இருவர், செங்கல்பட்டு ஒரத்தி கிராமத்தில் மின்கம்பி மீது தேர் உரசியதில் ஒருவர் என மின் விபத்தால் உயிரிழப்புகள் தொடர்கின்றன.
இதுபோன்ற துரதிர்ஷ்ட சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மின்வாரியத்தினர், தீயணைப்பு துறையினர் இது தொடர்பாக அவ்வப்போது போதிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.