/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்
திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்
திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்
திண்டுக்கல் சிறுமலையில் வெடித்தது என்ன; போலீசார் உட்பட 3 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் போலீசார் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் சிறுமலை 17வது கொண்டை ஊசி பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாலுகா போலீசார், வனத்துறை அதிகாரிகள் சம்பவத்திற்கு சென்று உடலை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது இறந்த உடலின் அருகே வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருளை போலீசார் கையில் எடுத்தனர். அப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் 2 போலீஸ், வனத்துறை அலுவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். போலீசார், இறந்து கிடந்த நபர் யார், எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர். முதல் கட்டமாக , இறந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.