Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்காணியுங்க: நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்: போதிய விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்புகள்

கண்காணியுங்க: நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்: போதிய விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்புகள்

கண்காணியுங்க: நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்: போதிய விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்புகள்

கண்காணியுங்க: நான்கு வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்: போதிய விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்புகள்

ADDED : அக் 07, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நான்கு வழி சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் தனியார், அரசு பஸ்கள், தனியார் வாகனங்களின் போக்குவரத்திற்கு நான்கு வழிச்சாலை , புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தனியார் வாகனங்களான கார், கனரக வாகனங்களின் வேகம் அதிகரித்து வருகிறது. தனியார் வாகனங்களில் அதிக வேகத்தில் பயணிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புகள் , முன்னால் செல்லும் வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

விபத்தில் சிக்கும் பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் சீட் பெல்ட் போன்றவை அணியாமல் அதிக காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தலைக்காயம் ஏற்படும் போது உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து விடுகிறது. விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் உயிர் இழந்து விடுகின்றனர்.

அது போல் விபத்து இடத்திலே உயிர் இழப்பதும் அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பல்வேறு இடங்களில் விபத்தில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர் .நான்கு வழிச்சாலையில் விபத்து அடிக்கடி நடக்கும் இடங்களில் வேகத்தின் அளவை குறைக்க வேண்டும். விபத்து தடை கோடுகளை அமைக்க வேண்டும். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு வலது புறம் வழிவிட்டு செல்ல அறிவுறுத்தல்களை வழங்குவதோடு உள்ளூர் நபர்கள் நான்கு வழி சாலையில் டூவீலர்களில் எதிரே வருவதையும் தவிர்க்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.

அறிவுறுத்தலாமே நான்கு வழிச்சாலையில் தற்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. விபத்து ஏற்படும் இடங்களில் 80 கிலோமீட்டர் ஆக குறைக்க வேண்டும். முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலையில் மேடு இருக்கும் பட்சத்தில் அங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். விபத்து ஏற்பட்ட பின் தவறு யாருடையது என்பதை பார்ப்பதை விட விபத்து ஏற்படுவதற்கு முன்பு அனைத்தையும் சரி செய்ய போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும். - மனோகரன் இன்சூரன்ஸ் ஏஜன்ட் பழநி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us