ADDED : ஜூன் 03, 2025 12:40 AM

திண்டுக்கல்: ஊனத்தின் தன்மையை சரியாக மதிப்பீடு செய்யாமல் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை வஞ்சிப்பதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவர்களை கண்டித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மருத்துவகல்லுாரி மருத்துவமனை முன்பு நடந்த இதற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.