ADDED : மே 30, 2025 03:47 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் பூண்டி, கிளாவரை, கவுஞ்சியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மின்பாதையில் மரங்கள் விழுந்து மின்கம்பம், ஒயர்கள் சேதமடைந்தன.
வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் பழுதுகளை சீர் செய்வதில் இடையூறு உள்ளதால் ஒரு வாரமாக மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. மன்னவனுார் வரை அவ்வப்போது மின்சப்ளை வந்து செல்லும் நிலை நீடிக்கிறது. பூண்டி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இருளில் உள்ளதால் தொலை தொடர்பு, இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேல்மலை பகுதி மின்பாதை முழுமையும் வனப்பகுதியில் செல்கிறது. இதில் அடர்ந்துள்ள மரங்களால் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது.
மின் தடையை சீர்செய்ய உயர்கோபுரம், கேபிள் அமைத்தால் மட்டுமே சீர்செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.