/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள் சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
சாணார்பட்டியில் அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்
ADDED : செப் 17, 2025 07:44 AM
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் மாணவர்களுக்காக கால தாமதமாக வந்த அரசு பஸ்சை கிராமத்தினர் சிறைபிடித்தனர் .
சாணார்பட்டி வழியாக வீரசின்னம்பட்டிக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். 2 வாரமாக காலை 8:15 மணிக்கு வரக்கூடிய பஸ் 9:00 மணிக்கு வந்தது. இதையடுத்து செப்.11ல் அரசு பஸ்சை கிராமமக்கள் சிறைபிடித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் சரியான நேரத்திற்கு வரவில்லை . ஆத்திரமடைந்த மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். போலீசார் , போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.