/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அ.தி.மு.க.,வை பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை- சொல்கிறார் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் அ.தி.மு.க.,வை பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை- சொல்கிறார் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார்
அ.தி.மு.க.,வை பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை- சொல்கிறார் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார்
அ.தி.மு.க.,வை பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை- சொல்கிறார் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார்
அ.தி.மு.க.,வை பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை- சொல்கிறார் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார்
ADDED : செப் 15, 2025 06:56 AM
திண்டுக்கல் : அ.தி.மு.க., ஆட்சி பற்றி ஒரு வரி கூட த.வெ.க., தலைவர் விஜய் பேசவில்லை. தி.மு.க.,வையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மட்டுமே விமர்சித்தார் என திண்டுக்கல்லில், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசினார்.
ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரான செந்தில்குமார் எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் அளித்த பேட்டி : மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையும். யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு கிடையாது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து பிரதமர் மோடி, அ.தி.மு.க.,விடம் முதலில் விஜய் கேட்க வேண்டும். பிரசாரத்தில் அ.தி.மு.க., பற்றி ஒரு வரி கூட பேசவில்லை.
பிரதமர் பற்றி பாசாங்காகபேசுகிறார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்கள் மீது கல்லை போடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது எதிர்கட்சி தலைவர் பழனிசாமியும், மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ., அரசும் தான்.
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் குவியும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதால் பணிச்சுமை இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசு அலுவலர்களும், ஆட்சியில் இருக்கக்கூடிய முதல்வர் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இந்த சுமையை சுகம் என ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றார்.