ADDED : ஜன 11, 2024 04:28 AM
நத்தம் : -நத்தம் வேலாயுதம்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ,விழிப்புணர்வு முகாம் நத்தம் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் நடந்தது. முகாமை ஊராட்சிமன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முறையாக பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோபால்பட்டி உதவி மருத்துவர் முருகானந்தம், பராமரிப்பு உதவியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.