/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேன் கவிழ்ந்து விபத்து: ஆந்திர பயணிகள் 10 பேர் காயம் வேன் கவிழ்ந்து விபத்து: ஆந்திர பயணிகள் 10 பேர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து: ஆந்திர பயணிகள் 10 பேர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து: ஆந்திர பயணிகள் 10 பேர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து: ஆந்திர பயணிகள் 10 பேர் காயம்
ADDED : ஜூன் 05, 2025 03:07 AM

தாண்டிக்குடி:கொடைக்கானல் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் அமர்நாத் ரெட்டி. இவர் தலைமையில் 14 பேர் கொடைக்கானல் சுற்றுலா சென்றனர். வேனை மதுரையைச் சேர்ந்த ராமசாமி ஓட்டினார். நேற்று மாலை ஊர் திரும்புகையில் மலைப்பாதையில் நண்டாங்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
இதில் லிங்கம்மாள் 45, ஈஸ்வரி 42, மாதவராவ் 67, நாக மல்லேஸ்வரி 54, ரவீந்திர ரெட்டி 48, நரசம்மாள் 55, லட்சுமி 50, வெங்கட்ரவம்மாள் 50 காயமடைந்தனர். காயமடைந்தவர்களை கொடைக்கானல் பி.டி.ஓ., பிரபா ராஜமாணிக்கம் தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.