/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா
முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா
முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா
முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 10, 2025 01:49 AM

நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி, குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதி,அசோக்நகர் பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதிகளில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது. மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
சிவசுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் விசேஷ அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது.