ADDED : பிப் 25, 2024 05:43 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் 5 மையங்களில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி,ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று மாநிலம் முழுவதும் தட்டச்சு தேர்வு தொடங்கியது. மாவட்டத்தை பொறுத்தவரை தட்டச்சு இளநிலை தேர்வுக்கு 3200, தட்டச்சு மேல்நிலைத் தேர்வுக்கு 2101 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வெழுத வசதியாக திண்டுக்கல் ஆர். வி.எஸ். பாலிடெக்னிக் கல்லுாரி, எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லுாரி, ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லுாரி, புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லுாரி, பழநி அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.
நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00மணி வரை 5 பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது.