/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உரிமம் இல்லாமல் கடைகளுக்கு சிலிண்டர் சப்ளை: இருவர் கைது உரிமம் இல்லாமல் கடைகளுக்கு சிலிண்டர் சப்ளை: இருவர் கைது
உரிமம் இல்லாமல் கடைகளுக்கு சிலிண்டர் சப்ளை: இருவர் கைது
உரிமம் இல்லாமல் கடைகளுக்கு சிலிண்டர் சப்ளை: இருவர் கைது
உரிமம் இல்லாமல் கடைகளுக்கு சிலிண்டர் சப்ளை: இருவர் கைது
ADDED : மார் 25, 2025 04:54 AM
திண்டுக்கல்: பழநி புது ஆயக்குடி சுற்றுப் பகுதிகளில் வணிக பயன்பாடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டரை முறையான உரிமம் இன்றி சிலர் சப்ளை செய்வதாக திண்டுக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் பழநி ஆயக்குடி பகுதி கடைகளில் சோதனை செய்தனர்.
அங்கு சில கடைகளில் முறையான உரிமமின்றி காஸ் சிலிண்டர்கள் இருந்தது தெரிந்தது.
போலீசார் அங்கிருந்த 73 காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து அதை சப்ளை செய்த பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த குமரேசன் 32, புது ஆயக்குடியை சேர்ந்த காஜா மொய்தீன் 40 இருவரை கைது செய்தனர்.
இவர்களுக்கு சிலிண்டர் வழங்கியவரையும் தேடி வருகின்றனர்.