ADDED : ஜூன் 24, 2024 04:38 AM
பழநி : பழநி சண்முக நதியில் சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் தலைவர் சரஸ்வதி தலைமையில் வாயில் கருப்பு துணியை கட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் கூறியதாவது, தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு போல இனி எதுவும் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாயில் கருப்பு துணி கட்டி சோகத்தை வெளிப்படுத்தி உள்ளோம். போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றார்.