/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்: கைதுபோக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்: கைது
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்: கைது
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்: கைது
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்: கைது
ADDED : ஜன 11, 2024 03:57 AM
திண்டுக்கல் : 15-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. அண்ணா போக்குவரத்து தொழிலாளர் சங்கம், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., உள்ளிட்ட அமைப்புகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது. அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் சி.ஐ.டி.யு., திண்டுக்கல் மண்டலத் தலைவர் ஜெயக்குமார், ஓய்வுப்பெற்றோர் நல அமைப்பின் சி.ஐ.டி.யு.,மண்டல பொதுச் செயலர் ராமநாதன் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை முன் நடந்த மறியல் போராட்டத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு., மத்திய சங்கத் துணை செயலாளர் செல்லமுத்து தலைமை வகித்தார். கன்வீனர் முருகேசன், ஓய்வு பெற்றோர் சங்கத்தைச் சேர்ந்த பூமிபாலகன், முருகேசன், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அசோக், சி.ஐ. டி .யு. சேர்ந்த மணிவண்ணன் தண்டபாணி சின்னப்பராஜ் பங்கேற்றனர்.
பழநி போக்குவரத்து தொழிலாளர் மற்றும் ஓய்வூதியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே மயில் ரவுண்டான அருகே சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் கனகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.