/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானல் ஏரிச்சாலையில் பார்க்கிங் கட்டண கொள்ளை அதிருப்தியில் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் ஏரிச்சாலையில் பார்க்கிங் கட்டண கொள்ளை அதிருப்தியில் சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் பார்க்கிங் கட்டண கொள்ளை அதிருப்தியில் சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் பார்க்கிங் கட்டண கொள்ளை அதிருப்தியில் சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் பார்க்கிங் கட்டண கொள்ளை அதிருப்தியில் சுற்றுலாப்பயணிகள்
ADDED : மே 18, 2025 04:50 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலையில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் ஊழியர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுவதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.
கொடைக்கானலில் இந்தாண்டு கோடை சீசனையடுத்து நாள்தோறும் ஏராளமானோர் முகாமிடுகின்றனர். நகரின் இதயமாக உள்ளது ஏரியாகும். இப்பகுதியில் பிரையன்ட் பூங்கா, படகு குழாம் உள்ளது.
ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி என பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏரி நடைமேடையில் நடைபயிற்சி, இயற்கை சுற்றுச்சூழலை கண்டு மகிழ்கின்றனர்.
இதையடுத்து பயணிகள் வசதிக்காக நகராட்சி புருட்டன் வளாகம், பிரையன்ட் பூங்கா பகுதியில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் தனி நபர்களை நியமித்து வசூலில் ஈடுபடுத்தி வருகிறது.
இதற்கான கட்டண ரசீதில் காருக்கு ரூ. 60, வேனுக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால் ரசீதில் நகராட்சி சீல், கமிஷனரின் கையெழுத்தில்லை. இந்த இரு பார்க்கிங் பகுதியை தவிர்த்து 5.கி.மீ., சுற்றளவில் உள்ள ஏரிச்சாலை முழுதும் நிறுத்தப்படும் வாகனங்களிடம் ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.
நகராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள் இஷ்டம்போல் வசூலித்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஏரிச்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசாரும் அபராதமும் விதிக்கின்றனர்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
புருட்டன் வளாகம், பிரையன்ட் பூங்கா பகுதியில் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஏரிச்சாலை சுற்று பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு ஈடுபடுபவது தெரிந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.