/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நெரிசல்'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நெரிசல்
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நெரிசல்
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நெரிசல்
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நெரிசல்
ADDED : ஜன 28, 2024 06:17 AM

கொடைக்கானல், : கொடைக்கானலில் தொடர் விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நெரிசல் நீடித்தது.
தைப்பூசம், குடியரசு தினம் ,வார விடுமுறை என தொடர் விடுமுறையால் மலை நகரான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சில தினங்களாக குவிந்து வருகின்றனர். நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்கள் நகரில் அணிவகுத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உகார்தே நகர், சீனிவாசபுரம், அப்சர்வேட்டரி, எரிச்சலை, கோக்கர் ஸ்வாக் , மூஞ்சிக்கல்லில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். போலீசார் நெரிசலை சீர் செய்த போதும் நெரிசல் நீடித்தது.காலம், காலமாக தொடரும் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத நிலையே நீடிக்கிறது. மேலும் இங்கு உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் குவிந்தனர். ஏரிச்சலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும், ஏரியில் படகு சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர்.