ADDED : மே 31, 2025 12:56 AM

வடமதுரை: வடமதுரை பஸ் நிறுத்தப்பகுதியில் இரு பக்கமும் தினமலர் செய்தி எதிரொலியாக நிழற்குடைகளை பேரூராட்சி நிர்வாகம் அமைத்தது.
வடமதுரையில் இருந்து செங்குறிச்சி, திருக்கண், போஜனம்பட்டி, திண்டுக்கல், திருச்சி, வேடசந்துார் என பல ரோடுகள் பிரிகின்றன.
வடமதுரை பேரூராட்சி தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால் தாலுகாவாக பிரிக்கும் முயற்சி நடக்கிறது. இவ்வளவு இருந்தும் பஸ் ஸ்டாண்ட் அமையாமல் உள்ளது. குறைந்த பட்சமாக நிழற்குடை கூட இல்லாமல் பயணிகள் மழை, வெயிலுக்கு பரிதவித்தனர். இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்திகள் வெளியாகின.
இதன் எதிரொலியாக தற்போதைய ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மீட்கப்பட்ட பஸ் நிறுத்தப் பகுதியில் இரு பக்கமும் பேரூராட்சி நிர்வாகம் பயணியர் நிழற்குடைகளை அமைத்தது. மழை, வெயிலுக்கு இதுநாள் வரை பரிதவித்த பயணிகளுக்கு மிகுந்த ஆறுதலை தந்துள்ளது.