ADDED : மே 14, 2025 05:11 AM
வேடசந்துார் : மினுக்கம்பட்டி தனியார் பள்ளியில் 2013 ல் கட்டட பணிகள் நடந்தபோது மர்ம நபர்கள், கட்டட பணிக்கான கம்பிகளை லாரியில் திருடினர்.
வேடசந்துார் போலீசார் தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ராஜா 49, சண்முகம் 47, பரமசிவம் 65, ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் சென்ற மூவரும் வழக்கில் ஆஜராகாமல் இருந்தனர். வேடசந்துார் நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பித்ததை தொடர்ந்து எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.