/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்
ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்
ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்
ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்
ADDED : ஜன 28, 2024 06:04 AM

நாட்டில் துாய்மை பாரதம் என மத்தியரசு பெரும் திட்டத்தை தீட்டி திறந்தவெளி கழிப்பிடமே இருக்க கூடாது என வீடுகளிலேயே கழிப்பறைகள் அமைக்க மானியம் வழங்குகிறது. இதுதவிர பொது சுகாதார வளாகங்களும் அதிகளவில் அமைக்கப்படுகின்றன. இப்படி துாய்மை நாட்டிற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில் சேகரமாகும் கழிவு நீரை எவ்வித தயக்கமும் இல்லாமல் நடுரோட்டில் ஊற்றும் பழக்கம் பரவலாக அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. பல இடங்களில் வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ரோட்டில் விடுகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீர் விடப்படும்போது அவ்விடத்தில் தார் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. பொதுவாக ரோடு புதுப்பித்தல் பணி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் அதுவரை அதே நிலை நீடிக்கிறது. அங்கு ஏற்பட்டுள்ள பள்ளம், தேங்கி நிற்கும், ஊற்றப்பட்ட கழிவு நீரை கண்டு டூவீலர் போன்ற இலகு ரக வாகனங்கள் அப்பகுதியில் ஒதுங்கி செல்ல முற்படும்போது மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டில் கழிவு நீர் ஊற்றும் நிலை மாற அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் மாற்றம் ஏற்படும்.