/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமேபோதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே

நீண்ட கால கோரிக்கை
எல். தங்கவேல், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர், குஜிலியம்பாறை: மாவட்டத்திலே குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி வறட்சி பாதித்த பகுதியாகும். நடப்பு பருவத்தில் போதிய மழை இல்லாததால் எந்த குளங்களுக்கும் தண்ணீர் வரவில்லை.
வாழ்விற்கு வழி பிறக்கும்
ஆர்.பூபதி, சமூக ஆர்வலர், செங்குளத்துப்பட்டி, ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி: சில ஆண்டுகளாகவே குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் போதிய பருவ மழை இல்லை. செங்குளத்துப்பட்டியில் உள்ள குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் 2024 ல் விவசாயிகள் போதிய நீரின்றி விவசாயம் செய்ய முடியாமலும் கால்நடைகளை முறையாக பராமரிக்க முடியாமலும் அவதிக்கு ஆளாகும் நிலை நேரிடும். இதை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் வரும் காலத்தில் விவசாயம் செழிக்கும். கால்நடைகள் வளர்ச்சி கிடைக்கும். மக்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
ஆய்வு மேற்கொள்ளுங்க
ஜி.ஆர்.ராஜகோபால், குடகனாறு வலது பிரதான கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர், திருக்கூர்ணம் : காவிரியில் கூடுதலான நீர் வரும்போது எல்லாம் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தான் வேடசந்துார் தாலுகா பகுதி குளங்களுக்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்கிறோம். இதற்காகத்தான் தற்போதைய தி.மு.க., ஆட்சியில், பைப் லைன் மூலம் குளங்களுக்கான தண்ணீரை நிரப்பும் ஆய்வு பணியை மேற்கொள்ள ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். ஆய்வு பணியை விரைந்து முடித்து அனைத்து குளங்களையும் காவிரி நீரால் நிரப்ப வேண்டும்.


