/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : மே 21, 2025 06:15 AM

சின்னாளபட்டி; பிள்ளையார்நத்தம் மகா முத்து மாரியம்மன் கோயில் விழாவிற்காக குடகனாற்றில் இருந்து தீர்த்தம் குட ஊர்வலம் நடந்தது.
ஆத்துார் ஒன்றியம் பிள்ளையார் நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நடந்தது. பிள்ளையார்நத்தத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக குடகனாறு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீர்த்தம், பால்குட ஊர்வலத்தை துவக்கினர்.
அனுமந்தராயன்கோட்டை பித்தளைப்பட்டி திண்டுக்கல்-குமுளி 4 வழி சாலை வழியே ஊர்வலம் நடந்தது.
அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், பால் அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.