/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாறிய வானிலை குளிர்ந்தது திண்டுக்கல் மாறிய வானிலை குளிர்ந்தது திண்டுக்கல்
மாறிய வானிலை குளிர்ந்தது திண்டுக்கல்
மாறிய வானிலை குளிர்ந்தது திண்டுக்கல்
மாறிய வானிலை குளிர்ந்தது திண்டுக்கல்
ADDED : மே 27, 2025 01:18 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகரில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சில நாட்களாக அவ்வப்போது மழையும் பெய்து உஷ்ணத்தை தணித்து வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. காலை 7:00 மணிக்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது.
நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடனே இருந்தது.
அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழையும் பெய்தது. ஆங்காங்கே ரோடு பள்ளங்களில் மழை நீர் தேங்கியதால் டூவீலர்கள், நடந்து சென்றவர்கள் சற்று சிரமத்துக்குள்ளாகினர்.