/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண் அள்ளுவதால் சேதமான பெரிய அய்யம்பள்ளி குளக்கரை மண் அள்ளுவதால் சேதமான பெரிய அய்யம்பள்ளி குளக்கரை
மண் அள்ளுவதால் சேதமான பெரிய அய்யம்பள்ளி குளக்கரை
மண் அள்ளுவதால் சேதமான பெரிய அய்யம்பள்ளி குளக்கரை
மண் அள்ளுவதால் சேதமான பெரிய அய்யம்பள்ளி குளக்கரை
ADDED : ஜூன் 28, 2025 12:33 AM

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பெரியஅய்யம்புள்ளி குளத்தில் மண் அள்ளுவதால் கரைகள் சேதமடைவதால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
பழநி பாலசமுத்திரம் கொடைக்கானல் மலை அடிவாரப்பகுதியில் பெரியஅய்யம் புள்ளி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் பல நுாற்றுக்கணக்கான ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. மேலும் இக்குளத்தில் இருந்து ஒன்பது குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஓடைவழியாக குளத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது. இந்த குளம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாசன வசதிகளை கொண்ட அமைப்பை உடையது. தற்போது குளத்தில் மண் அள்ளுவதாலும் கரைகள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
நடவடிக்கை எடுங்க
முத்துராமலிங்க போஸ், தலைவர், நீரினை பயன்படுத்துவோர் சங்கம்: குளத்தில் மண் அள்ளுவதால் கரைகள் சேதமடைந்துள்ளன.
அவற்றை சரி செய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடி மராமரத்து பணிகள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில் கரைகள் வலுவிழந்து உள்ளன. மதகு சேதம் அடைந்து உள்ளது.
வாய்க்காலில் ஆக்கிரமிப்பு
கருப்பணன், உறுப்பினர், நீரினை பயன்படுத்துவோர் சங்கம்: பெரிய அய்யம்புள்ளி குளம் நிறையும்போது தண்ணீர் வெளியேறும் பகுதி சேதமடைந்து உள்ளது.
மீன் பிடிப்பது நலிந்த மீனவர்களுக்கு வழங்கி வந்த நிலையில் அரசு உத்தரவின் படி ஏலமுறையில் மீன் பிடிப்பது நடந்தது. சில ஆண்டுகளாக அதற்கான பங்குத்தொகை சங்கத்திற்கு வழங்கவில்லை.
வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு நீர் வரும் பாதையை சரி செய்து தரும் பணியை பொதுப்பணி துறையினர் செய்து தர வேண்டும்.
ஓடை புதர்களில் காட்டுப்பன்றி
முத்துச்சாமி, பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர்: அய்யம்புள்ளி குளத்தின் கரைகளை பலப்படுத்த அமைக்கப்பட்ட சுவர்கள் சேதமடைந்து உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். மதகுகள் பழுதடைந்து உள்ளது. மண் அள்ளுவதால் குளத்தின் கரைகள் சேதம் அடைந்து உள்ளது.
கரைகளில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
குளத்து ஓடைகளில் உள்ள புதர்களில் காட்டுப்பன்றிகள் மறைந்துள்ளன. இவை விவசாய பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதர்களையும் தாக்குகிறது என்றார்.