திண்டுக்கல் கோவிலுார் கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் தொட்டனம்பட்டி முதல் எரியோடு, கோவிலுார், குஜிலியம்பாறை வழியாக டி.கூடலுார் வரை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறையாக மாற்றி அமைக்கப்படவில்லை. ரோடு அருகிலே மின் கம்பங்கள் தொடர்ந்து வரிசையாக உள்ளன. கோவிலுாரின் மையப் பகுதியில் திண்டுக்கல் கரூர் மெயின் ரோடு செல்கிறது. இந்த இடத்தில் ஆயிரம் மீட்டர் துாரத்திற்கு இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றாமல் அப்படியே ரோடை அமைத்துள்ளனர். இதில் டிவைடரை வளைத்து கட்டி உள்ளனர். இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் கோவிலுார் மையப் பகுதியை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேடசந்தூர் கரூர் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் ஆண்டிபட்டி அருகே டோல்கேட் கட்டணம் வசூல் செய்வதால் பெரும்பாலான வாகனங்கள் திண்டுக்கல் கோவிலுார் கரூர் வழித்தடத்தில் பயணிக்கின்றன.இதனால் கடும் போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் ஆளாகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கோவிலுார் மையப் பகுதியில் உள்ள ரோடை முறைப்படி நான்குவழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும். வளைந்தப்படி உள்ள டிவைடரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ரோட்டை முறையாக அகலப்படுத்தி விட்டு டிவைடரை அமைத்து கொள்ளட்டும் என்கின்றனர் பொதுமக்கள்.