/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போதையில் நிர்வாணமாக கலாட்டா நடவடிக்கை எடுக்க தயங்கிய போலீசார்போதையில் நிர்வாணமாக கலாட்டா நடவடிக்கை எடுக்க தயங்கிய போலீசார்
போதையில் நிர்வாணமாக கலாட்டா நடவடிக்கை எடுக்க தயங்கிய போலீசார்
போதையில் நிர்வாணமாக கலாட்டா நடவடிக்கை எடுக்க தயங்கிய போலீசார்
போதையில் நிர்வாணமாக கலாட்டா நடவடிக்கை எடுக்க தயங்கிய போலீசார்
ADDED : ஜன 05, 2024 04:52 AM
வேடசந்தூர் : வேடசந்துார் ஆத்துமேட்டில் நிர்வாணமாக கலாட்டா செய்த போதை நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், வேட்டி வாங்கி கட்டிவிட்டு சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வேடசந்துார் ஆத்துமேடு கரூர் ரோட்டில் குடி போதை நபர் ஒருவர் பெண்களிடம் கலாட்டா செய்வதாக வேடசந்ததுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பாண்டியன் தலைமையில் வந்த போலீசாரை கண்டதும் அமைதியான நபர் போலீசார் சென்றதும் மீண்டும் கலாட்டாவில் ஈடுபட்டார். மீண்டும் போலீசாருக்கு தகவல் செல்ல மீண்டும் வந்த போலீசாரை கண்டதும் வாகனங்களை தடுத்து நிறுத்தினார்.
மேலும் தனது ஆடைகள் ஒவ்வொன்றாய் கழற்றி வீசிய அவர் நிர்வாணமாக ரோட்டில் உலா வந்தபடி நடு ரோட்டில் படுத்துக்கொண்டார். வாகனங்கள் ஒதுங்கி சென்றன.
போலீசாரோ அங்கிருந்த சில இளைஞர்கள் உதவியுடன் ஓரமாக துாக்கிச் சென்றனர்.
போலீசாரே புது கைலி வாங்கி கொடுத்து அணிய செய்து நாளைக்கு ஸ்டேஷனுக்கு வா என கூறி விட்டு சென்றனர். கைலி வாங்கி கொடுத்தது ஓகே... அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பினர்.