ADDED : ஜூலை 10, 2025 03:17 AM

அ நிறம் | அளவு
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை நடந்தது. மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரத்துடன், திருவாசக முற்றோதல், உற்சவர் பிரகார வலம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.





