/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் பெரியநாயகி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை பழநியில் பெரியநாயகி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
பழநியில் பெரியநாயகி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
பழநியில் பெரியநாயகி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
பழநியில் பெரியநாயகி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
ADDED : செப் 03, 2025 01:06 AM

பழநி : பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு நேற்று கோயில் மண்டபத்தில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் சுவாமி சந்திரசேகர், ஆனந்தவள்ளி, தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
சைவ சமய நால்வருக்கு அபிஷேகமும் நடைபெற்றது.
அதன்பின் வெளிப்பிரகாரத்தில் திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் வீட்டுக்கு மண் சுமந்த லீலை நடத்தப்பட்டது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.