பாலத்தின் அடியில் சிக்கிய சிறுவன்
பாலத்தின் அடியில் சிக்கிய சிறுவன்
பாலத்தின் அடியில் சிக்கிய சிறுவன்
ADDED : ஜூன் 30, 2025 03:02 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அஞ்சலி ரவுண்டானா பகுதியில் புறாப்பிடிக்கச்சென்று பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு மாட்டுபாதை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் கவுதம் 12. 6 ம் வகுப்பு படித்துவருகிறான்.
விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலம் அருகில் புறா பிடிக்க சென்றபோது பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டு இறங்க முடியாமல் கவுதம் தவித்துள்ளான். நண்பர்கள், அருகிலிருந்தோர், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.
மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் மயில்ராஜூ, புகழேந்தி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கவுதமை கயிறுக்கட்டி பத்திரமாக மீட்டனர்.