/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் முற்றுகை திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் முற்றுகை
ADDED : ஜூன் 28, 2025 12:37 AM
திண்டுக்கல்: பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கும் முன் காலிப் பணியிடங்களை மாநிலம் முழுவதும் நிரப்பும் கல்வித் துறையை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட தொடக்கல்வி அலுவலகத்தில் நடந்த இதில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலர் முருகன் கூறியதாவது:
பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன்னதாகவே காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெறுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது.
6 இடங்கள் நிரப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இடங்களுக்கு மாறுதல் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி முற்றுகையிட்டிருக்கிறோம்.நிர்வாக மாறுதல் அடிப்படையில் இனிமேல் காலிப் பணியிடங்களை நிரப்ப மாட்டோம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தை தாற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம் என்றார்.