ADDED : ஜூன் 11, 2024 11:39 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 81 அரசு உயர்நிலை, 90 அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதம் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்வதற்கு அரசு உத்தரவிட்டது.
அதன்படி உபரி பணியிடங்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்த இதில் 71 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.71 ஆசிரியர்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.