/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள் தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்

பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
பெரியசாமி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் : இந்திராநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. 2024ல் புதுப்பிக்கப்பட்ட அரசப்பபிள்ளைபட்டி -சாமியார்புதுார் தார்ரோடு பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
சேதமடைந்த ரோடால் சிரமம்
பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் : அரசப்பபிள்ளைபட்டியில் இருந்து அத்தப்பகவுண்டனுார் செல்லும் தார் ரோடு முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. ரோட்டின் பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறி விட்டதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.ரோடுகளில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
தேவை வடிகால் வசதி
தமிழரசி, கூலித் தொழிலாளி, சேரன் நகர் : சேரன் நகர் பகுதியில் சாக்கடை ,வடிகால்வசதி இல்லாமல் உள்ளது. இங்கு சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தெரு ரோடுகள் போடப்பட்டு பல ஆண்டுகளும் மேலாகி விட்டதால் குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலை 5:00 மணியுடன் டவுன் பஸ் சேவை நிறுத்தப்படுகிறது. இதனை நீட்டிப்புச் செய்ய வேண்டும்.