/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீர் மேலாண்மையை உலகிற்கு சொல்லித் தந்தது தமிழர் பண்பாடு- ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேச்சு நீர் மேலாண்மையை உலகிற்கு சொல்லித் தந்தது தமிழர் பண்பாடு- ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேச்சு
நீர் மேலாண்மையை உலகிற்கு சொல்லித் தந்தது தமிழர் பண்பாடு- ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேச்சு
நீர் மேலாண்மையை உலகிற்கு சொல்லித் தந்தது தமிழர் பண்பாடு- ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேச்சு
நீர் மேலாண்மையை உலகிற்கு சொல்லித் தந்தது தமிழர் பண்பாடு- ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேச்சு
ADDED : செப் 01, 2025 02:32 AM
திண்டுக்கல்: நீர் மேலாண்மையை பற்றி இந்த உலகிற்கு சொல்லித் தந்தது நமது தமிழர் பண்பாடு. அந்த பண்பாட்டை பின்பற்றி நாமும் ஏரி குளங்கள் வெட்ட வேண்டும் என ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேசினார்.
திண்டுக்கல்லில் 12வது புத்தக திருவிழா அங்கு விலாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. 4ம் நாள் புத்தக திருவிழாவில் நேற்று நீரின்றி அமையாது உலகு எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., முத்துசாமி பேசுகையில், 'நீர் தனக்குள் விழும் அனைத்தையும் உள்வாங்கும் திறன் கொண்டது. தண்ணீரை கட்டி வைக்க முடியாது. தண்ணீருக்கு இருக்கும் குணம் போல மனிதனுக்கும் இருக்க வேண்டும். பாட்டிலுக்குள் அடைபட்ட நீர் அதிலிருந்து எப்படியாவது வெளிவரத்தான் பார்க்கும். ஏனெனில், நீருக்கு எதன் மீதும் பற்று கிடையாது. எதிலும் ஒட்டவும் செய்யாது. நீரின் அந்த தன்மை போல, பற்றிலா வாழ்க்கை வாழ்ந்தால் தான் துயரில்லாத வாழ்க்கை வாழமுடியும் என சொல்லத்தான் இந்த தலைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். நீர் எல்லோருக்கும் பொது வானது. காப்பியங்களில், எவனொருவன் நீரை தேக்கிவைக்க கட்டுமானம் உருவாக்குகிறானோ அவனே உலகின் அத்தனை பெருமைக்கும் தகுதியானவன் என சொல்லப் பட்டுள்ளது.
பசலை நோய் உட்பட தேக சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கூட மலைகளை தழுவி வரும் புதுநீருக்கு உண்டு. ஆடிப்பெருக்கில் நீராடுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உண்மையில் அதற்கு 'புதுநீராடல்' என்றே பெயர். நீரை பற்றி அதிகம் பேச கூடிய இலக்கியம் புறநானூறு. நீரின் தன்மை, மேம்பாடு, செழுமை, பெருமை பற்றி பேசுகிறது. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை தண்ணீர். நிலமும், நீரூம் சேர்ந்தது தான் உணவு.
சோழர்களின் நீர் மேலாண்மை ஆச்சரியப்பட வைக்கக்கூடியது. சோழர்களுக்கு நீர் மேலாண்மை பற்றி உயர்ந்த எண்ணங்கள் இருந்திருக்கிறது. உத்திரமேரூர் கல்வெட்டில் சோழர்கள் காலத்தில் ஏரி வாரியம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் தற்போது ஏரி வாரியம் தவிர மற்ற எல்லா வாரியமும் இருக்கிறது. அந்த காலத்தில், 47 வகையான நீர் நிலைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. நீர் மேலாண்மை பற்றி உலகுக்கே சொல்லித்தந்தது நம் தமிழர் பண்பாடு. ஆகவே உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ் பண்பாட்டை பின்பற்றி நாமும் ஏரி, குளங்கள் வெட்ட வேண்டும். இருக்கும் நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.