/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி 'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி
'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி
'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி
'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி

அமைச்சர்கள் ஆப்சென்ட்
இங்கு மலர் கண்காட்சி , கோடை விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, பன்னீர்செல்வம்,சக்கரபாணி ,ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அமைச்சர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமாரும் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. 2024ல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருந்ததால் அதிகாரிகள் கலந்து கொண்டது போல் இந்தாண்டும் அமைந்தது.
சுற்றுலா பயணிகள் கூறியதாவது:
பிரம்பிக்க வைத்தது
உடன்குடி விவசாயி கிருஷ்ணா கூறுகையில்'' முதன் முறையாக கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியளித்தது. சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தது. தோட்டக்கலைத்துறை மலர்களால் வடிவமைத்த புவிசார் குறியீடு பெற்ற கொய்யா, திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு பிரம்மிக்க வைத்தது ''என்றார்.
கவர்ந்தது
சென்னை பத்மபிரியா கூறுகையில் '' மயில் வடிவமைப்பு வெகுவாக கவர்ந்தது. லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கியதுமனதிற்கு இதமாக இருந்தது. இங்கு நிலவும் இதமான சீதோஷ்ண நிலை, ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தத்தில் மலர்கண்காட்சி அருமையாக இருந்தது''என்றார்.
அருமை
காஞ்சிபுரம் பிரியா கூறுகையில்'' பூங்காவில் மலர் வடிவமைப்புகள் அருமை. காய்கறிகளால் உருவான கிளி, யானை , அணில் உள்ளிட்ட சிற்பங்கள் மனதை வருடுவதாக இருந்தது. கொடைக்கானல் சுற்றுலா மிக அருமையாக அமைந்திருந்தது''என்றார்.