ADDED : செப் 11, 2025 07:07 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் ,வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 70 மகளிருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கும் பொருட்டு மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 19 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலர், எண்.88, மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624 004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.