ADDED : ஜன 11, 2024 04:04 AM

வத்தலக்குண்டு : எம்.வாடிப்பட்டி கே.ஏ.எஸ் மாண்டிசோரி பப்ளிக் பள்ளியின் கீழ் செயல்படும் அபூர்வா பப்ளிக் சி.பி.எஸ்.இ.
பள்ளி மாணவர்கள் வேலுார் வி.ஐ.டி., பல்கலை நடத்திய ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மாணவர்கள் கவினேஷ் கார்த்திக், கமலேஷ், திவாகர் கணேஷ், நித்யஸ்ரீ, ரக்சிதா ஆகியோர் ரோபோடிக்ஸ் சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கி இரண்டாம் இடம் பிடித்தனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் சுதர்சன் பாராட்டினர்.