/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுற்றித்திரியும் தெருநாய்கள்...கடித்து குதறும் கொசுக்கள்... பரிதவிப்பில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள் சுற்றித்திரியும் தெருநாய்கள்...கடித்து குதறும் கொசுக்கள்... பரிதவிப்பில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள்
சுற்றித்திரியும் தெருநாய்கள்...கடித்து குதறும் கொசுக்கள்... பரிதவிப்பில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள்
சுற்றித்திரியும் தெருநாய்கள்...கடித்து குதறும் கொசுக்கள்... பரிதவிப்பில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள்
சுற்றித்திரியும் தெருநாய்கள்...கடித்து குதறும் கொசுக்கள்... பரிதவிப்பில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள்

தெரு விளக்கு வேண்டும்
சுந்தர்ராஜன், வி.எம்.ஆர்.பட்டி, 2வது தெரு: 20 வது வார்டில் பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் இருள் சூழ்ந்து கிடப்பதால் திருட்டு பயமும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை சாக்கடை வசதி
செல்வராஜ், வி.எம்.ஆர்.பட்டி, 2வது தெரு: வி.எம்.ஆர்.பட்டி பகுதிகளில் எங்கும் சாக்கடை வசதிகள் இல்லாமலிருப்பதால் கழிவுநீர் ரோட்டில் செல்கின்றன. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம். மழை நீரோடு சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் வருகிறது. இதைக்கட்டுப்படுத்த சாக்கடை வசதிகள் அமைக்க வேண்டும்.
குறுகிய தெருக்கள்
ஜெயலட்சுமி, வி.எம்.ஆர்.பட்டி, 2வது தெரு: வி.எம்.ஆர்.பட்டி 2வது தெரு பகுதியில் தெருக்கள் குறுகலாக இருப்பதால் அவசரத்திற்கு கூட எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத நிலை உள்ளது. கொசுக்கள் அதிகளவில் இருப்பதால் குழந்தைகள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். கொசு மருந்து அடிக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை
ஜெயந்தி, கவுன்சிலர், (தி.மு.க.,): தெரு விளக்குகளில் தற்போது 35 விளக்குகள் எரியாமல் உள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். விளக்குகள் வந்ததும் பொருத்தப்படும். சாக்கடையும் அமைக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் தொல்லையும் உள்ளது. இதை அடிக்கடி அதிகாரிகள் பிடித்து செல்கிறார்கள். விரைவில் மக்கள் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.