ADDED : ஜன 28, 2024 06:07 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் ஏ.எம்.சி.
ரோட்டிலுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை சங்க அலுவலக கட்டடத்தில் சங்க மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம், தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. பொதுசெயலாளர் பாரி வரவேற்றார். செயலாளர் வீரகடம்ப கோபு, மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் மகுடபதி முன்னிலை வகித்தனர். பொருளாளர் எழில்வளவன் ஏற்பாடு செய்தார். 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப்.6ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை செய்தனர்.