Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கரும்புகளை சேதப்படுத்தும் அணில், முயல்கள் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

கரும்புகளை சேதப்படுத்தும் அணில், முயல்கள் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

கரும்புகளை சேதப்படுத்தும் அணில், முயல்கள் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

கரும்புகளை சேதப்படுத்தும் அணில், முயல்கள் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

ADDED : ஜன 03, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் அறுவடைக்கு தயாரான கரும்புகளை அணில்,முயல்கள் சேதப்படுத்துவதால் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கலக்கமடைந்தனர்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சுற்றுப்பகுதிகளில் பொங்கல் நேரத்தில் அறுவடை செய்வதற்காக கரும்புகள் அதிகளவில் பயரிடப்படுகிறது.இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் கரும்பு விவசாயிகள் நல்ல விலைக்கு விற்க வேண்டி கரும்புகளை வளர்த்து வந்தனர். கரும்புகள் நல்ல முறையில் வளர்ந்த நிலையில் முயல்கள்,அணில்கள் கரும்புகளை கடித்து சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை விரட்டுவதற்காக எந்நேரமும் விவசாயிகள் தங்கள் வயல்களிலே தங்குகின்றனர்.

இருந்தபோதிலும் விவசாயிகள் கண் அசந்த நேரத்தில் அறுவடைக்கு தயாரான கரும்புகளை அணில்கள்,முயல்கள் கடித்து உண்ணுகின்றன. இதோடு மாடு வளர்ப்போர் மாடுகளை முறையாக பராமரிக்காமல் ரோட்டில் விடுவதால் அவைகளும் தோட்டத்திற்குள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்துகின்றன . கரும்பு அறுவடை நேரத்தில் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதும் சவாலாக உள்ளது.

எல்லா பொருட்களும் விலை ஏறும் நிலையில் விவசாய பொருட்கள் மட்டும் விலை ஏறாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கணேசன்,கரும்பு விவசாயி,செட்டிநாயக்கன்பட்டி: பல ஆண்டுகளாக கரும்பு விவசாயத்தில் ஈடுபடுகிறேன். 2022ல் விலை குறைந்ததால் இந்த ஆண்டு உற்பத்தியை குறைத்தேன். ஆனால் இந்தாண்டு புதியதாக அணில்கள்,முயல்கள் அதிகளவில் கரும்புகளை சேதப்படுத்துகிறது. வனத்துறை அதிகாரிகள் இங்குள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து வன விலங்குகள் சேதப்படுத்தாமல் தடுக்கலாம். என்னை போல பல விவசாயிகள் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்களும் கிடைக்காததால் விவசாயத்தை கை விட்டு வேறு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us