/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முருக்கடியில் ஒற்றை யானை: மக்கள் அச்சம்முருக்கடியில் ஒற்றை யானை: மக்கள் அச்சம்
முருக்கடியில் ஒற்றை யானை: மக்கள் அச்சம்
முருக்கடியில் ஒற்றை யானை: மக்கள் அச்சம்
முருக்கடியில் ஒற்றை யானை: மக்கள் அச்சம்
ADDED : ஜன 08, 2024 05:31 AM
கன்னிவாடி : பன்றிமலை முருக்கடி பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை அகழியை கடந்து வந்து பாக்கு மரங்கள், மிளகுத்துாள் சாகுபடியை சேதப்படுத்தியது.
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, எலுமிச்சை, தென்னை, மிளகு,காபி சாகுபடி நடக்கிறது.
தண்ணீர், உணவு தேவைக்காக, மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது.
சாகுபடியை சேதப்படுத்துவது மட்டுமின்றி மலை கிராம விவசாயிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது.
ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதிகளை தொடர்ந்து ஆத்துார் நீர்த்தேக்க அடிவாரம், தருமத்துப்பட்டி கோம்பை,கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்க அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்தது.
பன்றிமலை ரோடு வனத்துறை செக்போஸ்ட் அருகே கோம்பை பகுதியில் சமீபத்தில் ஒற்றை யானை முகாமிட்டு இருந்தது. தற்போது முருக்கடி,தோணிமலை விலக்கு, பாறைக்கடவு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. இங்கு தோட்டங்களில் புகுந்த யானை, பாக்கு மரங்கள், மிளகு கொடிகள் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்தியது.