வெள்ளி பொருட்கள் பிரிப்பு
வெள்ளி பொருட்கள் பிரிப்பு
வெள்ளி பொருட்கள் பிரிப்பு
வெள்ளி பொருட்கள் பிரிப்பு
ADDED : மார் 11, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில் வெள்ளி பொருட்கள் பிரிக்கும் பணி நடந்தது.
பழநி முருகன் கோயில் உண்டியலில் தங்கம்,வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைக்கும் .இதில் சிலர் அடிவாரம் பகுதியில் கிடைக்கும் தகரத்திலான உருவங்களை வெள்ளியென நம்பி வாங்கி உண்டியலில் செலுத்துகின்றனர். இவற்றுடன் உண்மையான வெள்ளி பொருட்களும் கலந்து இருக்கும். இதில் வெள்ளி பொருட்களை பிரிக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நகை சரிபார்ப்பு இணை கமிஷனர் அன்னக்கொடி, கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, நகை அளவிட்டாளர் ராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.


