/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை தேவை; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை அடிமையாகி வருவதால் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை தேவை; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை அடிமையாகி வருவதால்
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை தேவை; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை அடிமையாகி வருவதால்
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை தேவை; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை அடிமையாகி வருவதால்
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை தேவை; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை அடிமையாகி வருவதால்
ADDED : ஜூன் 30, 2025 02:56 AM

சமீப காலமாக, சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் போதை வஸ்து பழக்கத்தால், வாழ்க்கையில் தடம் மாறி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த தீய பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். பள்ளி, கல்லுாரிக்கு அருகில் பெட்டிக்கடை மற்றும் தனிநபர் மூலம் போதைப்பொருள் விற்பனை மறைமுகமாக நடக்கிறது. இதனை பயன்படுத்தும் சில மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரின் குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. போதைப் பொருள் விற்போர், கடத்துபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை குறித்து கண்காணிப்பதோடு, புழக்கத்தில் விடுபவர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணிக்க வேண்டும். இதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.
பள்ளி அருகே மட்டுமல்லாமல், பஸ் ஸ்டாப் பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும். போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போலீசார் அவ்வப்போது கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், போதைப்பொருட்களின் புழக்கம் குறைந்தபாடில்லை. மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, போலீசார் என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்வேறு தீவிர நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் போன்றவற்றை அதிகரிப்படுத்த வேண்டும்.