ADDED : ஜன 25, 2024 05:45 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் பொருளாதார துறையின் சார்பாக 2 நாட்களாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குநர் துரை ரத்தினம் கருத்தரங்க ஆய்வு மலரை வெளியிட்டார். கருத்தரங்க இயக்குநரும் ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார்.
கேரள பல்கலை பேராசிரியர் வீரகுமரன்,நிர்வாக இயக்குனர் மார்க்கண்டேயன் , துணை முதல்வர் நடராஜன் ,மதுரை பேராசிரியர் தீனதயாளன் பேசினர்.
கல்லுாரியின் ஆலோசர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சுருதி மோகன், சுஜாதா, உதவிப் பேராசிரியர் ராஜா கலந்து கொண்டனர். உதவிபேராசிரியர் அருண் நன்றி கூறினார்.