/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளிகளில் வசூல் வேட்டையால் பாதிப்பு பள்ளிகளில் வசூல் வேட்டையால் பாதிப்பு
பள்ளிகளில் வசூல் வேட்டையால் பாதிப்பு
பள்ளிகளில் வசூல் வேட்டையால் பாதிப்பு
பள்ளிகளில் வசூல் வேட்டையால் பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
சின்னாளபட்டி, : சின்னாளபட்டி பகுதியில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான அரசு, உதவி பெறும், தனியார் கட்டுப்பாட்டில் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கிய சூழலில் பிற பள்ளிகளுக்கு சேர்க்கைக்காக வெளியேறும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குவதில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆத்துார் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் சில உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை முதல் மாற்று சான்றிதழ் வரை பல்வேறு காரணங்களை கூறி வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். தடையற்ற கல்வியை தொடர்வதற்காக அரசு சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் தனியார், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பலர் அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்க்கைக்காக அணுகுகின்றனர். இருப்பினும் கட்டண பட்டியல் அறிவிப்பு இல்லாத சூழலில் உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது 9ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்காக பிற இடங்களுக்கு சேர்க்கைக்கு செல்லும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழை பெற ஆயிரக்கணக்கில் கட்டணம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கல்வித்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ''எந்தவித நிபந்தனையுமின்றி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும். மீறி வசூல் வேட்டை, பணம் கேட்டு வற்புறுத்தல் புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் குறித்து 73730 02631க்கு புகார் செய்யலாம், என்றார்.