/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி
ADDED : ஜூன் 20, 2025 03:39 AM
பண்ணைக்காடு: பண்ணைக்காடு தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து இறந்தார்.
கும்பரையூரை சேர்ந்த செல்வகுமார் மகள் காமாட்சி பிரியா 17.பண்ணைக்காட்டு பிரிவில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
மதிய உணவு எடுத்து செல்லாத நிலையில் தந்தை செல்வகுமார் மதிய உணவை எடுத்து வந்து கொடுத்தார். மதிய உணவு சாப்பிட்ட மாணவி காமாட்சி பிரியா தலைவலி, மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் கூறிய நிலையில் மயங்கி விழுந்தார்.
பண்ணைக்காடு அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்.
உடற்கூறு பரிசோதனைக்கு திண்டுக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.